சுவிட்சர்லாந்தில் நேற்று மாணவர்களின் ஒரு நாள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், பெர்னில் ஒரு பெரிய பேரணியும் இடம்பெற்றுள்ளது.
கல்வியில் திட்டமிடப்பட்ட நிதி வெட்டுக்களை எதிர்த்து சுவிஸ் மாணவர் சங்கம் (UNES) சுவிஸ் தலைநகரின் மையப்பகுதியில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தது.
அதே நேரத்தில், 35,000 கையொப்பங்களுடன் ஒரு மனுவை மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டது.
சூரிச், பாசல், லூசெர்ன், லொசான், ஜெனீவா மற்றும் நியூசாடெல் ஆகிய இடங்களிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மத்திய அரசாங்கமும் வௌட் கன்டோனும் செய்யும் பட்ஜெட் வெட்டுக்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பைக் காட்டுவதற்காக சுமார் 150 பேர் லொசானில் கூடி, நண்பகலில் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒரு வாரத்திற்கு முன்னர் மாகாண அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 பட்ஜெட்டில், லொசான் பல்கலைக்கழகத்திற்கான ஒதுக்கீடு சுமார் 20 மில்லியன் பிராங்கினால் வெட்டப்பட்டுள்ளது.
அறிவிக்கப்பட்ட வெட்டுக்கள் பல்கலைக்கழகத்தின் பட்ஜெட்டில் சுமார் 7% குறைப்பைக் குறிக்கின்றன.
மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் சூரிச்சில் நகர மையத்தின் தெருக்களில் நண்பகலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிட்டத்தட்ட 700 பேர் சூரிச்சின் தெருக்களில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
மூலம்-swissinfo

