ட்ரோன்கள் அவதானிக்கப்பட்டதை தொடர்ந்து ஜெர்மனியின், மியூனிக் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நேற்று மாலை இடைநிறுத்தப்பட்டன.
இதன் விளைவாக, நேற்று இரவு 10:18 மணி நிலவரப்படி மொத்தம் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 3,000 பயணிகள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
உள்வரும் பதினைந்து விமானங்கள் ஸ்ரூட்கார்ட், நியூரம்பெர்க், வியன்னா மற்றும் பிராங்பேர்ட்டுக்கு திருப்பி விடப்பட்டன.
சுமார் 20 பிற விமானங்கள் தாமதமாக தரையிறக்கப்பட்டன.
விமான நிலையம், விமான நிறுவனங்களுடன் இணைந்து, முனையங்களில் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு போர்வைகள், பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கியது.
பொலிஸ் ஹெலிகொப்டர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பெடரல் பொலிஸ் உறுதிப்படுத்தியது.
ஆனால் ட்ரோன்களையோ அல்லது அவற்றின் உரிமையாளர்களையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
“பயணிகளின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை” என்று விமான நிலையம் தெரிவித்துள்ளது.
அண்மையில், டென்மார்க், ஒஸ்லோ விமான நிலையங்களில் ட்ரோன்கள் பறந்தால் விமான நிலையங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டன.
மூலம்- 20min.

