ஒக்டோபர் 4, ஆம் திகதி மதியம் 12:30 மணியளவில், பீலில் உள்ள சில்பெர்காஸில் உள்ள ஒரு கடையில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பெர்ன் பொலிஸ் தெரிவித்துள்ளது.
கடையில் சிறிது நேரம் இருந்த ஒரு அடையாளம் தெரியாத நபர், ஒரு பெண் ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தை ஒப்படைக்குமாறு கோரினார்.
பின்னர் அவர் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் க்ரூஸ்ப்ளாட்ஸை நோக்கி தப்பிச் சென்றார்.
உடனடி தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், சந்தேகத்திற்குரிய குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை.
மூலம்- 20min

