இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட, எகிப்து நடத்தும் அமைதி உச்சி மாநாட்டில் சுவிட்சர்லாந்து கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல் சிசி தலைமையில் 20க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டுத் தலைவர்களும், அரபுத் தலைவர்களும் இன்று இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
“உச்சிமாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளில் சுவிட்சர்லாந்து இல்லை” என்று மத்திய வெளியுறவுத் துறையின் (FDFA) செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மூலம்- swissinfo

