-1.7 C
New York
Wednesday, December 31, 2025

மதுபோதையில் பேருந்து நிறுத்தத்தை துவம்சம் செய்த டெலிவரி வாகன ஓட்டுநர்.

பிரிட்னாவ் அருகே குடிபோதையில் இருந்த டெலிவரி லொறி ஓட்டுநர் ஒருவர், பேருந்து நிறுத்தத்தை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்று விட்டதாக ஆர்காவ் கன்டோனல் பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லீபிஜென் மாவட்டத்தில் பிரிட்னாவ் மற்றும் ஃபாஃப்னாவ் இடையேயான நகரத்திற்கு வெளியே உள்ள பகுதியில் இன்று அதிகாலை 5 மணிக்குப் பின்னர் இந்த விபத்து நிகழ்ந்தது.

சேதமடைந்த பேருந்து நிறுத்தத்தின் கூரை அமைப்பு புல்வெளிகளிலும், வீதியில் சிதைவுகளும் காணப்பட்டன.

கன்டோனல் பொலிசாரின் விசாரணையில், ஒரு வாகனம் வீதியை விட்டு விலகி, புல்வெளியில் சுமார் 60 மீட்டர் தூரம் சறுக்கி, பேருந்து நிறுத்தத்தில் கடுமையாக மோதியது தெரியவந்தது.

ஆரம்பத்தில், பொறுப்பான நபர் பற்றிய எந்த தடயமும் இல்லை. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, 48 வயதுடைய ஒருவரின் முதலாளி, விபத்துக்கு அவர்தான் காரணம் என்று பொலிசாருக்குத் தெரிவித்தார்.

அதிகாரிகள் சம்பவ இடத்தில் பெரிதும் சேதமடைந்த வாகனத்தை கண்டுபிடித்தனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் ஓட்டுநரை வீட்டில் சந்தித்தனர்.

அவர் கணிசமாக குடிபோதையில் இருந்ததால், இரத்த மாதிரியை வழங்க வேண்டியிருந்தது. அவரது ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

விபத்துக்கான சூழ்நிலைகள் குறித்து ஆர்காவ் கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles