சுவிஸ் இராணுவத்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி, லென்ஸ்பர்க்கில் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களிடம் வன்முறையாக நடந்து கொண்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இராணுவத்தின் நீதி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் இப்போது வேறொரு பிரிவுக்கு மாற்றபபட்டுள்ளார் என இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
தற்போதைய நடவடிக்கைகள் முடிந்ததும் வழக்கு குறித்து மேலும் மதிப்பீடு செய்யப்படும். விசாரணையின் ரகசியத்தன்மை குறித்து, இராணுவத்தால் எந்த தகவலையும் வழங்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- swissinfo

