ஐரோப்பிய அளவில், விதி விபத்து இறப்புகளில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவிஸ் வீதிகளில் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 34% அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு மட்டும் 250 பேர், வீதிவிபத்துகளில் இறந்துள்ளனர்.
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் இந்த எதிர்மறையான போக்கை மாற்றியமைக்கவும், உயிரிழப்புகள் அதிகரிப்பதைத் தடுக்கவும் முடியவில்லை என்று சுவிஸ் விபத்து தடுப்பு கவுன்சில் (BFU) செவ்வாயன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் ஆதரவு இல்லாமல், 2030 ஆம் ஆண்டுக்குள் வீதி விபத்து இறப்புகளின் எண்ணிக்கையை 100 ஆகக் குறைக்கும் கூட்டாட்சி வீதிகள் அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய வாய்ப்பில்லை என்று BFU தெரிவித்துள்ளது.
மூலம்- swissinfo

