பாஸ்போர்ட் தரவரிசைக்கான உலகளாவிய அளவுகோலான 2025 பாஸ்போர்ட் குறியீட்டில், சுவிஸ் பாஸ்போர்ட் உலகளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
www.passportindex.org இன் தரவுகளின்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) பாஸ்போர்ட் தரவரிசையில் 179 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட் 175 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளன.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து, இத்தாலி, டென்மார்க், போர்ச்சுகல், சுவிட்சர்லாந்து, கிரீஸ், ஒஸ்ரியா, நோர்வே, அயர்லாந்து மற்றும் தென் கொரியா, மலேசியா ஆகிய நாடுகள் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
சுவிஸ் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 120 நாடுகளுக்கு வீசா இன்றி பயணிக்க முடியும். 45 நாடுகளுக்கு ஒன் அரைவல் வீசாவை பெற முடியும். 9 நாடுகளுக்கு இலத்திரனியல் பயண அனுமதியை பெற வேண்டும். 24நாடுகளுக்கு மட்டுமே விசா பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

