கிராபுண்டனில் உள்ள ஷியர்ஸில் லொறியுடன் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது கணவருடன் ஒரு பெண் லேண்ட்கார்ட்டிலிருந்து டாவோஸ் நோக்கி N28 இல் பயணித்துக் கொண்டிருந்த போது, கிராபுண்டனில் உள்ள ஷியர்ஸில் உள்ள ஒரு சிறிய வலது வளைவில், எதிரே வந்த லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில், பெண் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
அவரது கணவன் சுரில் உள்ள கிராபுண்டனின் கன்டோனல் மருத்துவமனைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார். புதன்கிழமை இரவு அவர் அங்கு இறந்தார்.
மூலம்- bluewin

