லூசெர்ன் மாகாணத்தில் நேற்றுக்காலை நடந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.
57 வயதான அவர் தனது சிறிய மோட்டார் சைக்கிளில் நட்வில்லில் உள்ள மௌன்சிஸ்ட்ராஸ்ஸில் இருந்து மௌன்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, காலை 10:50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
போல்மாட்டில், அவர் இடதுபுறம் திரும்ப முனைந்த போது, பின்னால் வந்து கொண்டிருந்த கார் மோதியது. விபத்தில் 57 வயதான பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இறந்தவர் ஒரு சுவிஸ் போஸ்ட் ஊழியர். “எங்கள் எண்ணங்கள் குடும்பத்துடன் உள்ளன; இது நம் அனைவரையும் ஆழமாக பாதிக்கிறது,” என்று சுவிஸ் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மூலம்-20min.

