சூரிச்சில் புதிய இரவு ரயிலை பெடரல் ரயில்வே நேற்று அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய தலைமுறை நைட்ஜெட், சூரிச் மற்றும் ஹாம்பர்க் இடையே பயணிக்கும், அதிக வசதியை வழங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் புதிய நைட்ஜெட் ரயிலுக்கு “சூரிச் நகரம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இது உடனடியாக சூரிச் மற்றும் ஹாம்பர்க் இடையே இயக்கப்படும்.
இந்த இரவு சேவை 2026 முதல் ஆம்ஸ்டர்டாம் மற்றும் வியன்னா வழித்தடங்களிலும் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும்.
இது ஐரோப்பாவின் மிகவும் நவீனமான இரவு ரயில் ஆகும். தூங்கும் மற்றும் கூச்செட் பெட்டிகளுக்கு மேலதிகமாக நைட்ஜெட் தனி பயணிகளுக்கு மினி கபின்களையும் வழங்குகிறது.
புதிய இரவு ரயில்கள் காலநிலைக்கு ஏற்ற இரவு பயணத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன என்று ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
மூலம்- swissinfo

