கறுப்பு வெள்ளியை முன்னிட்டு, 7.9 மில்லியன் பொதிகளை விநியோகித்து, சுவிஸ் போஸ்ட் சாதனை படைத்துள்ளது.
நவம்பர் 24 முதல் டிசம்பர் 2 வரை – விநியோகிக்கப்பட்ட பொதிகளின் எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட, கிட்டத்தட்ட 4 இலட்சம் பொதிகள் அதிகமாகும்.
சுவிஸ் போஸ்ட் ஊழியர்கள் மீண்டும் இந்த ஆண்டு கணிசமான எண்ணிக்கையிலான பொதிகளை வரிசைப்படுத்தி வழங்க வேண்டியிருந்தது. கறுப்பு வெள்ளியை ஒட்டி இணைய சில்லறை விற்பனையாளர்கள் வழங்கும் தள்ளுபடிகளே இதற்குக் காரணம்.
கிறிஸ்மஸுக்கு முந்தைய வாரங்களில், வரிசைப்படுத்தும் மையங்கள் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் சுவிஸ் போஸ்டில் பணிபுரியும் 20,000 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் சுமார் 500 தற்காலிக ஊழியர்களால் ஆதரிக்கப்படுவார்கள் என்று சுவிஸ் போஸ்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அளவுகளைச் சமாளிக்க, சுவிஸ் போஸ்ட் ஒவ்வொரு நாளும் 370 க்கும் மேற்பட்ட கூடுதல் விநியோக சுற்றுகளை மேற்கொண்டு வருவதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.
கூடுதலாக, பெரிய வரிசைப்படுத்தும் மையங்களில் உள்ள அமைப்புகள் வழக்கமான 18 மணிநேரத்திற்குப் பதிலாக ஒரு நாளைக்கு 22 மணிநேரம் வரை இயங்குகின்றன.
மூலம்- swissinfo

