ஆயுதமேந்திய ஆபத்தான நபரைத் தேடி வரும் பெர்ன் கன்டோனல் பொலிசார், ரெகன்டோனல் பகுதியில் உடனடி ஆபத்து எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் அந்த பகுதியை விட்டு வேறு இடத்திற்குச் சென்றதற்கான அறிகுறிகள் இருப்பதாக பெர்ன் கன்டோனல் பொலிசார் ஞாயிற்றுக்கிழமை மாலை X மூலம் அறிவித்தனர்.
ரெகன்டோனல் மற்றும் டவன்னஸ் இடையேயான பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சூழ்நிலைகள் குறித்த கூடுதல் விவரங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர் என மதிப்பிடப்பட்ட அந்த நபர், பெர்ன் கன்டோனில் உள்ள டவன்னஸில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.
நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, ஒரு கட்டடத்திற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ஆனால் யாரும் காயமடையவில்லை.
மூலம்-bluewin

