4.8 C
New York
Sunday, March 29, 2026

உணவகத்தில் வெடித்த மோதல்- 7 பேர் காயம்.

ரோமன்ஸ்ஹார்னில் சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.

பன்ஹோஃப்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்த இரண்டு குழுக்களுக்கு இடையே அதிகாலை 4 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டதாக துர்காவ் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

நிலைமையை கட்டுப்படுத்த துர்காவ் கன்டோனல் பொலிசின் பல ரோந்துப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த 41 வயதுடைய இரண்டு ஆண்களும் 43 வயதுடைய ஒரு ஆணும் காயங்களுக்குள்ளாகிய நிலையில், அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

54 வயதுடைய ஒரு கொசோவர் ஆண், 35 வயதுடைய ஒரு அல்பேனிய பெண் மற்றும் 40 மற்றும் 27 வயதுடைய இரண்டு சுவிஸ் ஆண்கள் சிறிய காயங்களுக்குள்ளாகினர். அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மற்ற இரண்டு நபர்களான 52 வயதுடைய ஒரு சுவிஸ் ஆண் மற்றும் 48 வயதுடைய ஒரு வடக்கு மாசிடோனியன் ஆண், காயமின்றி தப்பினர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles