புலாக்கில் நேற்று அதிகாலை நடந்த கொலை முயற்சியில் ஒருவர் படுகாயமடைந்தார். சிறிது நேரத்திலேயே சூரிச் கன்டோனல் போலீசார் சந்தேக நபரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விநியோக ஓட்டுநர் ஒருவர் அதிகாலை 1:30 மணியளவில் வாடிக்கையாளரின் அழைப்பில், அடுக்குமாடி குடியிருப்பிற்குள் அழைக்கப்பட்டார். பின்னர் பல்கேரிய நபரான 24 வயதுடைய ஓட்டுநர் கத்தியால் குத்தப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் தானாகவே அடுக்குமாடி குடியிருப்பை விட்டு வெளியேறி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு, சந்தேகத்திற்குரிய குற்றவாளியான 28 வயது சுவிஸ் நபர், அவரது சகோதரியின் வீட்டில் கைது செய்யப்பட்டார்.
மூலம்- bluewin

