நவம்பர் 20 மற்றும் 22 ஆம் திகதிகளுக்கு இடையில், 23 வயது இளைஞன் ஒருவர் எம்மென்ப்ரூக், ரோதன்பர்க் மற்றும் லூசெர்ன் நகரில் 29 வாகனங்களின் டயர்களை வெட்டி சேதப்படுத்தியுள்ளார்.
இதன் விளைவாக ஏற்பட்ட சொத்து சேதம் 13,000 சுவிஸ் பிராங்குகள் என லூசெர்ன் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சந்தேக நபர் சிறிது நேரத்திலேயே பொலிசில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. அதிருப்தி காரணமாக தான் இந்தக் குற்றங்களைச் செய்ததாக அவர் கூறினார்.
மூலம்- bluewin

