சூரிச் விமான நிலையத்திலிருந்து கடந்த சனிக்கிழமை காலை 10:10 மணிக்கு, தன்சானியாவுக்கு புறப்பட்ட எடெல்வைஸ் விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது,திடீரென்று, திரும்பியது.
ஒரு பயணியுடன் சிக்கல் இருப்பதாக கட்டுப்பாட்டு கோபுரத்திற்கு வானொலி மூலம் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் ஆரம்பத்தில் சிக்கலைத் தீர்க்க முயன்றனர்.
ஆனால் மற்ற விமானங்கள் ஓடுபாதைக்காகக் காத்திருந்ததால், எடெல்வைஸ் விமானம் வழிவிட வேண்டியிருந்தது.
விமானத்தில் இரண்டு பயணிகள் எங்கள் குழுவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவில்லை மற்றும் மிகவும் அநாகரீகமாக நடந்து கொண்டனர் என்று எடெல்வைஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக விமானம் வாயிலுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பின்னர் இரண்டு பயணிகளும் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.”
ஒரு பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவரும் அவருடன் சென்றார்.
விமானத்தில் இருந்த ஏனைய 306 பயணிகள் இரண்டு மணி நேரம் தாமதத்திற்குப் பின்னர் 11:37 மணிக்கு தங்கள் பயணத்தைத் தொடங்க முடிந்தது .
சூரிச்சிற்கு திரும்பும் விமானமும் ஒன்றரை மணி நேரம் தாமதமானது. சான்சிபாருக்கு செல்லும் இணைப்பு விமானம் எடெல்வைஸ் விமானத்திற்காக காத்திருந்தது மற்றும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது.
மூலம்- 20min

