பெர்னின் ஃபோர்ஸ்தாஸ் பகுதியில் நேற்று பாதசாரி ஒருவர் மீது லொறி மோதியது. சம்பவ இடத்திலேயே பாதசாரியான பெண் உயிரிழந்ததாக கன்டோனல் பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்தபோது அந்தப் பெண் முர்டென்ஸ்ட்ராஸை போக்குவரத்து சிக்னலில் கடக்க விரும்பினார் என்று பொலிசார் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் முர்டென்ஸ்ட்ராஸ் பல மணி நேரம் முழுமையாக மூடப்பட்டிருந்தது. இதனால் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டன.
மூலம்- bluewin

