முட்டென்ஸில் ஒரு விநியோக வாகனமும், டிராமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. வான் ஓட்டுநர் சிவப்பு விளக்கு சிக்னலைப் புறக்கணித்து திரும்பும் போது டிராமுடன் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நேற்றுக் காலை சுமார் 8:15 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வான் ஓட்டுநர் மற்றும் ஒரு டிராம் பயணி ஆகியோரே காயமடைந்தனர். மோதலில் வான் கடுமையாக சேதமடைந்தது,
இந்த விபத்தினால் டிராம் பாதை 14 மற்றும் மார்கெலக்கர்ஸ்ட்ராஸ் மூடப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

