பாசலில் உள்ள கூப் டிரெஸ்பிட்ஸில் (Coop Dreispitz ) தீ விபத்து ஏற்பட்டுள்ளது.புதன்கிழமை மாலை, சுமார் 7:50 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
பல மீட்டர் உயரத்திற்கு தீப்பிழம்புகளை தென்பட்டன. தீயணைப்பு படையினர் தீயை விரைவாக தீயை அணைத்தனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பாசல்-ஸ்டாட் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் குற்றவியல் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளின்படி, வெளிப்படையாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மர மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்- 20min

