வலைஸின் கிரான்ஸ்-மொன்டானாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் பலர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
லீ கொன்ஸ்டலேஷன் பார் மற்றும் கிளப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்ததாக கன்டோனல் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் இன்று அதிகாலை AFP இடம் தெரிவித்தார்.
இன்னமும் “தெரியாத காரணத்தால் ஏற்பட்ட வெடிப்பு” என்று அவர் விவரித்துள்ளார்.
மதுபான சாலையின் அடித்தளத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. 400 பேர் அமரக் கூடிய வசதி கொண்ட அந்த மதுபானசாலையில், வெடிப்பு நடந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை 1:30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
பல ஹெலிகொப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. காலை 10:00 மணிக்கு ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மூலம்- 20min

