3.2 C
New York
Sunday, March 29, 2026

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாண பகுதியில் உள்ள ஒரு வீடொன்றிற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு அச்சுவேலி – பத்தமேனி பகுதியில் உள்ள வீட்டிலேயே இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது, குறித்த வீட்டின் கண்ணாடிகள் மற்றும் ஹயஸ் வான் என்பனவும் சேதமாக்கப்பட்டுள்ளது.

வன்முறையில் காயமடைந்த 70 வயதான முதியவர் சிகிச்சைக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொழில் போட்டியே வன்முறைக்கு காரணம் என அச்சுவேலி பொலிஸார சந்தேகிக்கின்றனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

Latest Articles