24.3 C
New York
Saturday, August 15, 2026

3.10 கிலோ மெகா சிறுநீரகக் கல் – வயிற்றில் இருந்து அகற்றிய திருகோணமலை வைத்தியர்கள்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நோயாளி ஒருவரின் வயிற்றில் இருந்து மிகப்பெரிய சிறுநீரகக் கல் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை பகுதியில் வசித்து வரும் குறித்த நபருக்கு, வெள்ளிக்கிழமை இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சத்திரசிகிச்சையின் போது 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டுள்ளது.

2003 ஆம் ஆண்டு பிரேசிலில் 1.9 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் அகற்றப்பட்டதாக உலக சுகாதார திணைக்களத்தின் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், திருகோணமலை பொது வைத்தியசாலையில் தற்போது அகற்றப்பட்டுள்ள சிறுநீரகக் கல்லின் எடை 3 கிலோ 100 கிராம் ஆகும்.

இந்த சத்திரசிகிச்சை வைத்தியர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்றதுடன், வைத்தியர் எம்.எம். ரிஷ்லி, வைத்தியர் ஜே.எம். இஹ்ஸான், வைத்தியர் சீ. பிரகலாதன் உள்ளிட்டவர்களும், மயக்க மருந்து வைத்திய நிபுணர் வைத்தியர் அமிலவும் இதில் பங்கேற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles