10.7 C
New York
Friday, May 15, 2026

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து -21 பேர் பலி.

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதிய விபத்தில், குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெய்னின் தென்பகுதியில் உள்ள, அடமுஸ் நகருக்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 6:40 மணிக்கு மலகாவிலிருந்து மட்ரிட் நோக்கிச் சென்ற அதிவேக ரயில்  தடம் புரண்டு அருகேயிருந்த பாதையில் மோதிய நிலையில்,  மட்ரிட்டில் இருந்து ஹுல்வாவுக்கு எதிர் திசையில் பயணித்த மற்றொரு ரயிலும் தடம்புரண்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில்,  குறைந்தது 73 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறைந்தது இரண்டு ரயில்களிலும் 500 பயணிகள் பயணம் செய்த நிலையில், ரயில் பெட்டிகள் சிதைந்துள்ளதால் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களை மீட்பதில் கடும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles