2.3 C
New York
Sunday, March 29, 2026

ஈரானின் முக்கிய இராஜதந்திரி சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரினார்.

ஜெனிவாவுக்கான ஈரானின் முக்கிய இராஜதந்திரி ஒருவர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளார்.

இது ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான ஈரான் தூதரகத்தின் துணைத் தலைவரான அலிரேசா ஜெய்ரானி ஹொக்மாபாத் என்பவரே, ஈரானில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் விளைவுகளை அடுத்து சுவிசில் அரசியல் புகலிடம் கோரியுள்ளார்.

அவர் தனது பதவியை விட்டு விலகி தனது குடும்பத்தினருடன் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இடம்பெயர்வுக்கான அரச செயலகம் (SEM) இதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை. தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை கவலைகள் காரணமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

மூலம்-20min

Related Articles

Latest Articles