19.4 C
New York
Friday, May 15, 2026

சூரிச் ஆர்ப்பாட்டத்தில் வன்முறை- பலர் காயம்.

சூரிச்சில் நேற்று மாலை இடம்பெற்ற உலகப் பொருளாதார மன்ற மாநாட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டததில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளன.

“டிரம்ப் வரவேற்கப்படவில்லை” என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகள் ஏந்திய படி சுமார் 2,000 பேர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் ஆரம்பத்தில் அமைதியாக இருந்த போது, சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்தன.

மக் டொனால்ட் முன்பாக எதிர்ப்புக் கோசம் எழுப்பப்பட்டதுடன் ஒரு ஆடம்பர வணிக மையத்தின் கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்கக் கொடிக்கு தீ வைத்தனர்.

அத்துடன், புகை குண்டுகள் வெடிக்கப்பட்டன, குப்பைத் தொட்டிகள் வீதித்தடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட பொலிசார் தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைத்து பொது போக்குவரத்தையும் முடக்கியதுடன். சூரிச்சின் பிரதான ரயில் நிலையத்தை நெருங்கினர்.

இதனால் பொலிசார் வீதிகளை மூடி ஆர்ப்பாட்டக்காரர்களை சுற்றிவளைத்தனர்.

நேற்றிரவு நிலவரங்களின்படி, இரட்டை இலக்க எண்ணிக்கையுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் காயம் அடைந்துள்ளனர். ஒருவர் மயக்கமடைந்து தற்போது தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையால் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles