16.4 C
New York
Tuesday, March 31, 2026

ட்ரம்ப் வருகைக்காக அமெரிக்க- சுவிஸ் விமானப்படை ஹெலிகள் ஒத்திகை.

சனிக்கிழமை பிற்பகல் சூரிச் விமான நிலையத்தில் பெரியதொரு ஹெலிகொப்டர் அணி காணப்பட்டது. பிற்பகல் 2:30 மணிக்குப் பின்னர், ஏழு ஹெலிகள் டாவோஸை நோக்கி பறந்து சென்றன.

ஞாயிற்றுக்கிழமையும் இதே செயல்பாடு காணப்பட்டது; விமான நிலையத்தின் தெற்கு முனையில் உள்ள ஓடுபாதை 34 இல் பிற்பகலில் ஹெலிகொப்டர் படைப்பிரிவு தரையிறங்கியது.

புறப்பட்ட ஹெலிகொப்டர்களில் இரண்டு சிகோர்ஸ்கி விஹெச்-60 வைட் ஹோக்கும் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி விமானத்தில் இருக்கும்போது இவை மரைன் வன் என்ற பெயரில் பயன்படுத்தப்படுகின்றன.

அவற்றுடன் சுவிஸ் விமானப்படையின் சிகோர்ஸ்கி யுஹெச்-60 பிளாக் ஹோக் மற்றும் சூப்பர் பூமா ஹெலிகொப்டர்கள் உள்ளிட்ட பிற இராணுவ ஹெலிகொப்டர்களும் சென்றன.

உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்க புதன்கிழமை டாவோஸ் வருவார் என்று எதிர்பார்க்கப்படும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வருகைக்கான ஒத்திகையாக இந்த விமான இயக்கங்கள் இருந்தன.

இந்த நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க ஹெலிகொப்டர்கள் சமீபத்திய நாட்களில் சுவிட்சர்லாந்திற்கு மாற்றப்பட்டன.

போயிங் சி-17 குளோப்மாஸ்டர் III மற்றும் லொக்ஹீட் சி-130 ஹெர்குலஸ் போன்ற பெரிய இராணுவ விமானங்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டன.

ஜனாதிபதி போக்குவரத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஹெலிகொப்டர்கள் தற்காலிகமாக டியூபென்டார்ஃப் இராணுவ விமானநிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles