23.7 C
New York
Sunday, July 5, 2026

சுவிசுடனான உறவு மீண்டும் சரியான பாதையில்- என்கிறார் அமெரிக்க திறைசேரி செயலாளர்.

கடினமான காலத்திற்குப் பின்னர், சுவிட்சர்லாந்துடனான உறவுகள் மீண்டும் சரியான பாதையில் திரும்பியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த கூட்டத்திற்காக நேற்று டாவோஸ் வந்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“சமீபத்திய மாதங்களில் ஏற்பட்ட கொந்தளிப்பான காலத்திற்குப் பிறகு, சுவிட்சர்லாந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மீண்டும் நல்ல பாதையில் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

கசப்பான விவாதங்களுக்குப் பிறகு, சுவிஸ் இறக்குமதிகள் மீதான அமெரிக்க வரிகளை 39% இலிருந்து 15% ஆகக் குறைக்க நவம்பர் மாதம் பெர்னும் வொஷிங்டனும் இறுதியாக உடன்பாட்டை எட்டின.

ஒப்பந்தத்தை இறுதி செய்ய மார்ச் 31 ஆம் திகக்குள் இரு நாடுகளும் இன்னும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

மூலம்-swissinfo

Related Articles

Latest Articles