16.4 C
New York
Tuesday, March 31, 2026

ட்ரம்பின் விமானத்தில் கோளாறு – தாமதமாகவே சூரிச் வந்து சேர்ந்தார்.

உலக பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று மதியம் 12.36 மணிக்கு சூரிச் விமான நிலையத்தில் தரையிறங்கினார்.

ட்ரம்ப் ஹெலிகொப்டர் மூலம் டாவோஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவர் பிற்பகல் 2.30 மணிக்கு உரை நிகழ்த்துவார்.

அங்கு, ட்ரம்ப் முதலில் சுவிஸ் ஜனாதிபதி கை பர்மெலின், வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் மற்றும் நிதி அமைச்சர் கரின் கெல்லர்-சுட்டர் உள்ளிட்ட சுவிஸ் சகாக்களை சந்திப்பார்கள்.

ஏர் போர்ஸ் வன் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ட்ரம்ப் சுவிட்சர்லாந்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது.

ஒன்றரை மணி நேரப் பயணத்தின் பின்னர் ட்ரம்ப் பயணித்த விமானத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் அமெரிக்காவிற்குத் திரும்பி வேறு விமானத்தில் பயணத்தை மேற்கொண்டதால், ட்ரம்ப் தாமதமாகவே சூரிச்சை வந்தடைந்தார்.

ஜனாதிபதி ட்ரம்ப்பின் விமானத்தின் வருகை சூரிச் விமான நிலையத்தில் ஏராளமான பார்வையாளர்களை ஈர்த்தது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles