சுவிட்சர்லாந்து சென் காலன் பாராளுமன்றத்தின் முதல்வராக சமூக செயற்பாட்டாளர் துரைராஜா ஜெயக்குமார் நேற்று பொறுப்பேற்றார்.
ஜெயகுமார் துரைராஜா 38 ஆண்டுகளுக்கு முன்னர் அகதியாக இலங்கையிலிருந்து சுவிட்ஸர்லாந்து வந்தார். அவர் சென் காலன் நகரின் உயர்ந்த அரசியல் பதவியான நகரமன்றத் தலைவர் (Stadtparlament-Präsident) பதவிக்கு, பசுமை கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கோண்டாவிலைச் சேர்ந்த துரைராஜா ஆரம்பக் கல்வியை கோண்டாவில் இராமகிருஷ்ணமிஷன் பாடசாலையிலும், உயர் கல்வியை உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றுள்ளார்.
சென் காலன் நகர மக்களில் சுமார் 30% பேர் சுவிஸ் குடியுரிமை இல்லாதவர்கள். அவர்களுக்காக அவர் குரல் கொடுக்கிறார். இனப் பாகுபாடு, சமூக புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு எதிராக போராடுகிறார். அவர் இதை ஒரு சவாலாக பார்க்கிறார்.“என் முன்னோடி ஜாக்லின் காசர்-பெக், கிரீன் கட்சியிலிருந்து வந்தவர். அவரின் பாதையில் நடக்க நான் தயாராக இருக்கிறேன்” என்கிறார்.
2011ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்து குடியுரிமை பெற்றார் ஜெயக்குமார் துரைராஜா.
ஒருகாலத்தில் ஆவணமில்லாத அகதியாக சுவிஸுக்குச் சென்ற துரைராஜா பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கிரீன் கட்சி சார்பில் நகரமன்றத்தில் அமர்ந்து வருகிறார்.
இப்போது 56 வயதாகும் இவர், தனது முழு வாழ்க்கையையும் ஒருபோதும் திரும்பிச் செல்ல முடியாத அகதிகளுக்காகவே அர்ப்பணித்துள்ளார்.
ஆவணங்களும் இல்லை, கல்வியும் இல்லை, கைப்பையும் இல்லை. இப்படித்தான் ஜெயகுமார் துரைராஜா 1988ஆம் ஆண்டு, 18 வயதில், சுவிட்சர்லாந்தில் காலடி வைத்துள்ளார்.
பாராளுமன்ற அவையில் ஏனைய கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவருடம் இணைந்து பயணிக்கும் நண்பர்கள் கலந்து இந்த நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
பாராளுமன்ற அவையில் திருக்குறளை மூன்று தடவைகள் முன்மொழிந்து டச் மொழியிலும் விளக்கினார்.
தமிழர் பண்பாட்டுடன் கூடிய இசையும் அவையரங்கில் வழங்கப்பட்டது. தமிழர் சிற்றுண்டி உணவுகள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது.

