19.4 C
New York
Friday, May 15, 2026

சுவிஸ் நோக்கி புறப்பட்டார் ட்ரம்ப்- இன்று காலை சூரிச்சை வந்தடைவார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலகப் பொருளாதார மன்றத்தில் பங்கேற்பதற்கு சுவிட்சர்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை, அவர் வெள்ளை மாளிகையில் இருந்து மரைன் வன் ஹெலிகொப்டரில் மேரிலாந்தில் உள்ள கூட்டுத் தளமான அண்ட்ரூவுக்கு அவர் பயணம் செய்தார். ஏர் ஃபோர்ஸ் வன் விமானம் அவருக்காக அங்கே காத்திருந்தது.

ட்ரம்பை ஏற்றி வரும் ஏர் ஃபோர்ஸ் வன் விமானம், இன்று காலை சூரிச்சிற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக சரியான நேரம் அறிவிக்கப்படவில்லை.

சூரிச்சிலிருந்து, ட்ரம்ப் டாவோஸுக்கு கார் அல்லது ஹெலிகொப்டர் மூலம் பயணிப்பார்.

மூலம்- 20min

Related Articles

Latest Articles