17.3 C
New York
Wednesday, June 17, 2026

தற்காலிகமாக மூடப்பட்ட ஜெனிவா வான்வெளி- தொழில்நுட்பக்கோளாறினால் நெருக்கடி.

ஜெனீவா விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் பகுதியில் நேற்று ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விமானங்களின் புறப்படுதல் மற்றும் தரையிறக்கங்கள் தடைப்பட்டன.

காலை 10 மணிக்கு ஏற்பட்ட இந்த தடங்கல் ஐம்பது நிமிடங்கள் நீடித்துள்ளது.

இதையடுத்து அரைவாசி விமானங்கள் மீண்டும் தொடங்கின. 80% விமானங்கள் காலை 11:30 மணியளவில் இயங்கத் தொடங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும் நேற்று நாள் முழுவதும் தாமதங்கள் ஏற்பட்டதாக ஜெனீவா விமான நிலைய செய்தித் தொடர்பாளர் இக்னேஸ் ஜீனரட் தெரிவித்தார்.

இதனால் நேற்றுக் காலை, 11 விமானங்கள் பாசல், லியோன் அல்லது அவர்கள் புறப்படும் நகரத்திற்கு திருப்பி விடப்பட்டன.

தொழில்நுட்ப விபத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜெனீவா வான்வெளியை தற்காலிகமாக மூடிவிட்டதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஸ்கைகைட் தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை இரவு நிறுவனம் ஒரு மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொண்டது. ஆனால் அமைப்பின் சில கூறுகள் சரியாக ஏற்றப்படவில்லை.

இந்த தொழில்நுட்பக் கோளாறினால் சூரிச் வான்வெளி பாதிக்கப்படவில்லை. அனைத்து விமானங்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டதாக நிறுவனம் மேலும் கூறியது.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles