17.3 C
New York
Wednesday, June 17, 2026

கார்னிவல் விழாக்களில் பனி மனிதன் எரிப்பை ரத்து செய்ய முடிவு.

கிரான்ஸ்-மொன்டானாவில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட கொடிய தீ விபத்துக்குப் பின்னர், சுவிட்சர்லாந்தில் உள்ள கார்னிவல் ஏற்பாட்டாளர்கள் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதன் ஒரு கட்டமாக, வலாய்ஸ் மாகாணத்தின் சியரில், கார்னிவல் விழாக்களின் போது “பனி மனிதன்” என்ற அடையாள எரிப்பை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், ஊர்வலங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற ஏனைய திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்தில் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான மோந்தே திருவிழா திட்டமிட்டபடி நடைபெறும்.

இங்கு பாதுகாப்பு மிகவும் கடுமையானதாக இருக்கும்அஎன்று அதன் மேலாளர் லோயிக் மானிக்லி தெரிவித்துள்ளார்.

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles