கிரான்ஸ்-மொன்டானா தீவிபத்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, வலாய்ஸ் மாகாணத்தில் உள்ள வழக்கறிஞர்கள் பிப்ரவரி நடுப்பகுதியில் இத்தாலிய புலனாய்வாளர்களைச் சந்திக்க உள்ளனர் என்று ரோமில் உள்ள சுவிஸ் தூதுவர் ரொபர்டோ பால்சரெட்டி தெரிவித்துள்ளார்.
இத்தாலிய மற்றும் சுவிஸ் நீதித்துறை அதிகாரிகள் ஏற்கனவே இணைந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் வலாய்ஸ் மாகாணம் கலந்துரையாடலில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சந்திப்பு தொழில்நுட்ப மட்டத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
இத்தாலி அத்தகைய சந்திப்பைக் கோரியதாக பால்சரெட்டி தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது எல்லை தாண்டிய ஒத்துழைப்பை அனுமதிக்கும் கூட்டு விசாரணை குழுக்கள் மூலம் இரண்டு வழக்குரைஞர் அதிகாரிகளும் இணைந்து பணியாற்ற முடியும் என்று பெர்னில் உள்ள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்தில் பல இத்தாலிய பிரஜைகள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான விசாரணையில் தமது நீதித்துறை பங்கேற்க அனுமதிக்குமாறு இத்தாலிய அரசாங்கம் பெர்னுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
இதன் ஒருகட்டமாக சுவிட்சர்லாந்திற்கான இத்தாலிய தூதுவர் கியான் லோரென்சோ கார்னாடோ ரோமுக்கு திருப்பி அழைக்கப்பட்டதுடன், கூட்டு விசாரணைக் குழுவை உருவாக்குவதற்கு இணங்கினாலேயே அவர் பெர்னுக்குத் திரும்புவார் என்றும் நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், “இரு நாடுகளுக்கும் இடையே எந்த நெருக்கடியும் இல்லை” என்று சுவிஸ் தூதுவர் பால்சரெட்டி தெரிவித்துள்ளார்.
மூலம்- swissinfo

