சுவிட்சர்லாந்தில் பால் விலைகள் இன்று முதல் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி பால் விலை இன்று முதல் ஒரு கிலோவிற்கு 0.04 பிராங் குறைந்து 0.78 பிராங் ஆக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளத.
தற்போது சுவிஸ் சந்தையில் அதிகளவு பால் உள்ளதே விலைக்குறைப்புக்கான காரணம் ஆகும்.
பதப்படுத்தக் கூடியதை விட அதிகமாக பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
அதேவேளை, உலகளவில் பாலின் விலை குறைந்து வருகிறது. இது சுவிஸ் பால் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
சில்லறை விற்பனையாளர்கள் விலையில் ஏற்பட்ட குறைப்பை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்புவதாகவும், விளம்பர பிரச்சாரங்களைத் திட்டமிடுவதாகவும் கூறுகின்றனர்.
மூலம்- swissinfo

