21.5 C
New York
Saturday, June 20, 2026

ரயில் கூரை மீது ஏறிய இளைஞர்கள் – மின்சாரம் தாக்கி ஒருவர் பலி.

பெய்ன்வில் ஆம் சீ மற்றும் மோசன் இடையேயான ரயில் பாதையில், வியாழக்கிழமை மாலை 7:30 மணியளவில், ரயிலின் கூரையில் ஏறிய இளைஞர்களில் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

17 வயது மற்றும் 18 வயதுடைய இரண்டு பேர், லென்ஸ்பர்க் நிலையத்தில் ரயிலில் ஏறினர். பெய்ன்வில் ஆம் சீ அருகே, 18 வயது இளைஞன் மின்சாரம் தாக்கி, ஓடும் ரயிலின் கூரையிலிருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

எனினும் இந்தச் சம்பவத்தில் அவரது நண்பருக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்துக்கான சரியான சூழ்நிலைகளை தெளிவுபடுத்த கன்டோனல் பொலிசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மீட்பு நடவடிக்கைகளுக்காக, பெய்ன்வில் ஆம் சீ மற்றும் மோசன் இடையேயான ரயில் பாதை மற்றும் பிரதான சாலை இரண்டும் பல மணி நேரம் மூடப்பட்டன.

ஜனவரி 24 ஆம் திகதி சோஃபிங்கன் ரயில் நிலையத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அதில் 17 வயது சிறுவன் ஒரு சரக்கு ரயிலில் ஏறி மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தான்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles