1 C
New York
Wednesday, February 11, 2026

கனடா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு- 10 பேர் பலி.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலைய நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் டம்ளர் ரிட்ஜில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் கொல்லப்பட்டதாக கனடிய பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஒரு உயர்நிலைப் பள்ளி மற்றும் அருகிலுள்ள ஒரு வீட்டில் இடம்பெற்றுள்ளனர். ஆறு பேர் உயர்நிலைப் பள்ளியில் இறந்து கிடந்தனர், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் பெண்ணும், பள்ளியில் இறந்து கிடந்தார்.

மேலும் இரண்டு பேர் ஒரு குடியிருப்பு கட்டடத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இது பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையது என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 25 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுக்காலை அப்பகுதியில் உள்ள மொபைல் போன்களுக்கு அனுப்பப்பட்ட பொது எச்சரிக்கை செய்தியில் விவரிக்கப்பட்டுள்ள அதே நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பொலிசார் உறுதிப்படுத்தினர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles