7.2 C
New York
Thursday, March 5, 2026

ஈராக் போன்ற சூழல் உருவாகும் ஆபத்து- சுவிஸ் வெளியுறவு அமைச்சர் அச்சம்.

மத்திய கிழக்கில் நடந்த தாக்குதல்கள் மற்றும் எதிர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளியுறவு அமைச்சர் இக்னாசியோ காசிஸ் சுவிஸ் அரசாங்கத்தின் இரங்கலைத் தெரிவித்தார்.

மேற்கு சுவிட்சர்லாந்தில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு முன்னர், ஈராக்கில் இருந்ததைப் போன்ற ஒரு சூழ்நிலை உருவாகும் என்று அஞ்சுவதாக காசிஸ் கூறினார்.

வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஜெனீவாவில் நடைபெற்ற சில நாட்களுக்குப் பிறகு, இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

அந்த விவாதங்களின் போது முன்னேற்றம் ஏற்பட்டதாக அமைச்சர் கூறினார். ஆனால் ஈரானுக்கு எதிராக ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள முடிவு செய்த அமெரிக்காவை அவர்கள் திருப்திப்படுத்தவில்லை என்றும் காசிஸ் குறிப்பிட்டார்.

“இராணுவ நடவடிக்கை எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தும் என்று நான் நம்பவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்

மூலம்- swissinfo

Related Articles

Latest Articles