இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள டானியல் ஹுன் மற்றும் அவரது மனைவி எடிட்டுக்கு, இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதரகம் அன்பான வரவேற்பைத் அளித்துள்ளது.
டானியல் ஹுன் மற்றும் அவரது மனைவி எடிட் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக தூதரகம் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளது.
- Advertisement -

இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்துக்கு இடையிலான நட்புறவு மற்றும் கூட்டாண்மைகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் சுவிற்சர்லாந்து தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய தூதுவரின் பதவிக்காலம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது


