சுவிஸ் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (SWISS) டுபாய்க்கான அதன் விமானங்களை மார்ச் 28 வரை ரத்துச் செய்துள்ளது.
முதலில் மார்ச் 15 வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், டுபாயில் உள்ள விமான நிலையங்களில் திறன் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் நடக்கும் போர் காரணமாக டுபாயில் உள்ள இரண்டு விமான நிலையங்களும் திறன் காரணங்களுக்காக விமான இயக்கங்களை “கணிசமாகக் குறைக்க” வேண்டியுள்ளதாக SWISS நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் விளைவாக, SWISS ஐ உள்ளடக்கிய Lufthansa Group விமான நிறுவனங்கள் டுபாய்க்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்ய வேண்டியிருந்தது.
கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் தனிப்பட்ட விமானங்களை இயக்குவது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பதை விமான நிறுவனம் மதிப்பிட்டு வருகிறது.
இதற்கான விண்ணப்பங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர் .
மூலம்- swissinfo

