4.8 C
New York
Saturday, March 14, 2026

ரயில் மோதி ஒருவர் காயம்.

துஷெர்ஸ்-ஆல்ஃபெர்மி ரயில் நிலையத்தில் ரயில் மோதி ஒருவர் காயம் அடைந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை பெர்ன் கன்டோனல் பொலிசாருக்கு, காயமடைந்த ஒருவர் துஷெர்ஸ்-ஆல்ஃபெர்மி ரயில் நிலையத்தில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்தது.

அந்த நபர்தண்டவாளத்தில் அலைந்து திரிந்து, பீலில் இருந்து கடந்து செல்லும் ரயிலில் மோதியதாக பெர்ன் கன்டோனல் பொலிஸ் தெரிவித்துள்ளது.

படுகாயமடைந்த நிலையில் இருந்த அவருக்கு முதலுதவி அளித்த பின்னர் ஆபத்தான நிலையில் ரெகா ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

விபத்து மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது பாதிக்கப்பட்ட ரயில் பாதை சுமார் இரண்டரை மணி நேரம் முழுமையாக மூடப்பட்டது.

மூலம்- 20min

Related Articles

Latest Articles