14.4 C
New York
Thursday, May 14, 2026

சுவருடன் மோதிய வாகனம் – 91 வயது ஓட்டுநர் பலி.

ஷாட்டோ-டி’ஓக்ஸில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை சுமார் 11:40 மணியளவில், இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக வௌட் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

கிராண்ட் ரூ சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு ஓட்டுநர்,சாலையின் வலதுபுறம் விலகி ஒரு தாழ்வான சுவரில் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

91 வயதான சுவிஸ் நாட்டவரான அந்த ஓட்டுநர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles