19 C
New York
Friday, May 15, 2026

சர்ச்சையில் சிக்கினார் ஈரானுக்கான சுவிஸ் தூதுவர்.

ஈரானுக்கான சுவிஸ் தூதுவர் ஒலிவியர் பாங்கர்ட்டர், பெர்னில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தெஹ்ரானில் உள்ள தனது சுவிஸ் இல்லத்தின் சுவர்களுக்குப் பின்னால் மதுபானம் நிரம்பிய ஒரு குளிர்சாதனப் பெட்டி இருப்பதாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுபானம் தடைசெய்யப்பட்ட, ஈரானில் இது ஆத்திரமூட்டும் செயலாக அமைந்துள்ளது.

இதையடுத்து ​​பெர்னில் உள்ள ஈரானிய தூதரகம் உடனடியாக எதிர்வினையாற்றி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

தூதரக உறவுகள் குறித்த வியன்னா உடன்படிக்கையை சமேற்கோள் காட்டி, தூதரக சிறப்புரிமைகளை அனுபவிப்பவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் நாட்டின் சட்டங்களையும் மதிக்க வேண்டும். முல்லா சர்வாதிகாரத்தில் இதுபோன்ற பொது அறிக்கைகள் ஒரு அவமதிப்பாகக் கருதப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளது.

கூட்டாட்சி வெளியுறவுத் துறை இந்தச் சூழ்நிலையைக் தணிக்க முயற்சிக்கிறது.

தூதுவர் “எப்போதும் சர்வதேசக் கடப்பாடுகளுக்கு இணங்கவே தனது கடமைகளைச் செய்துள்ளார்” என்று அது கூறியுள்ள போதும் பாங்கர்ட்டரின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர் தற்போது சுவிட்சர்லாந்தில் இருக்கிறார். அதே நேரத்தில் மற்ற நாடுகள் தெஹ்ரானில் தூதரகப் பிரதிநிதித்துவத்தை பராமரிக்கின்றன.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles