13.5 C
New York
Sunday, May 24, 2026

தானாக நகர்ந்த டெலிவரி வாகனம் மோதியதில் மூதாட்டி பலி.

சூரிச்சில் நடைபாதையில் ஓட்டுநர் இல்லாத டெலிவரி வாகனம் மோதியதில், ஓய்வூதியம் பெறும் மூதாட்டி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அந்த மூதாட்டி உயிரிழந்ததாக சூரிச் நகர காவல்துறை தெரிவித்தது.

ஒரு டெலிவரி வாகனம், மிஷெல்ஸ்ட்ராஸ் மற்றும் எங்கடினர்வெக் சந்திப்பிலிருந்து ரெஜென்ஸ்டோர்ஃபர்ஸ்ட்ராஸ் நோக்கி நகரத் தொடங்கியது.

ஓட்டுநர் இல்லாத அந்த வாகனம் பல மீட்டர்கள் உருண்டு சென்று நடைபாதையில் இருந்த பாதசாரி மீது மோதியது.

மருத்துவ உதவியாளர்கள் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதும் அவர் மரணமாகியுள்ளார்.

மூலம்- swissinfio

Related Articles

Latest Articles