21.2 C
New York
Friday, July 24, 2026

இந்தியா திரும்பினால் கைது நடவடிக்கை? ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அட்மினின் பெற்றோர் கவலை

சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party) என்ற பெயரில் பக்கத்தை நடத்தி, குறுகிய காலத்தில் 22 மில்லியன் (2.2 கோடி) பின்தொடர்பாளர்களைக் (Followers) கடந்து உலகளவில் ட்ரெண்டாகி ஆகி வருபவர் அட்மின் அபிஜீத் திப்கே (Abhijeet Dipke).

தற்போது அமெரிக்காவில் தங்கி உயர்கல்வி கற்றுவரும் அபிஜீத் திப்கே, இந்தியா திரும்பும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படலாம் என அவரது பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தங்களின் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“கடந்த 2 நாட்களாக நாங்கள் தூக்கத்தை தொலைத்து தவித்து வருகிறோம். அமெரிக்காவில் உயர்கல்வி கற்று வரும் எங்களது மகன், இந்த மாதிரியான அரசியல் நடவடிக்கைகளுக்குள் நுழைவதில் எங்களுக்கு சற்றும் விருப்பமில்லை. அவர் இந்தியா திரும்பினால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் எங்களை ஏற்பட்டுள்ளது. ” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles