14.9 C
New York
Sunday, September 27, 2026

சண்டிலிப்பாயில் சுவிசில் இருந்து சென்றவர் கொலை – இரண்டு சந்தேக நபர்கள் கைது.

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய்க்குச் சென்ற முதியவர் ஒருவர் அண்மையில் அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலையை மேற்கொண்ட சந்தேகநபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில் இன்று அதிகாலை யாழ்ப்பாணம் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் இன்று அதிகாலை இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் தெல்லிப்பழை மற்றும் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்களிடமிருந்து சில சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles