16.7 C
New York
Sunday, September 27, 2026

சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டார் டிரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது சொந்த மண்ணில் நடைபெறும் அமெரிக்காவின் முதல் உலகக் கோப்பை போட்டியில் கலந்துகொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பயணத் திட்டமிடல் குறித்து அறிந்த இருவர், லொஸ் ஏஞ்சல்ஸில் வெள்ளிக்கிழமை பராகுவேக்கு எதிரான போட்டியில் டிரம்ப் கலந்துகொள்ளமாட்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.

- Advertisement -

ஃபிஃபா உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று என்பதால், அவர் பங்கேற்காதமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்பிற்குப் பதிலாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ அதிகாரப்பூர்வ அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், பராகுவே ஜனாதிபதி சாண்டியாகோ பென்யா, இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்காகவே கலிபோர்னியாவிற்குப் பயணம் செய்வார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்புதான், டிரம்ப் தனது சொந்த ஊரான நியூயோர்க்கில் நடைபெற்ற NBA இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். அங்கு பார்வையாளர்கள் அவரை ஏளனம் செய்து கூச்சலிட்டனர்.

மூலம்- bluewin

Related Articles

Latest Articles