28.5 C
New York
Wednesday, August 12, 2026

லூசெர்ன் நகருக்குப் புறப்பட்டார் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்காக, நேற்று பிற்பகல் அண்ட்ரூஸ் கூட்டுத் தளத்தில் இருந்து சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் நகருக்குப் புறப்பட்டார்.

அமெரிக்கத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் ஏற்கனவே சுவிசில் பேச்சுவார்த்தைகளின் தொழில்நுட்ப அம்சங்களைக் கவனித்து வருகின்றனர்.

இந்த நிலையில், “உயர்மட்டத்தில் ஒரு முதன்மை நிலை அரசியல் தலைமை இருக்கும், பின்னர் தொழில்நுட்பக் குழு களத்தில் தங்கியிருக்கும்,” என்று சுவிட்சர்லாந்துக்குப் புறப்படுவதற்கு முன்னர் வான்ஸ் கூறினார்.

தன்னால் சுவிட்சர்லாந்தில் “ஒன்று அல்லது இரண்டு நாட்கள்” மட்டுமே தங்க முடியும் என்றும், ஆனால் ஈரானின் அணுசக்திப் பொருட்களைக் கையாள்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேலிடமிருந்து மீண்டும் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள லெபனானில் போர் நிறுத்தத்தில் முன்னேற்றம் காண்பது ஒரு முன்னுரிமை என்று குறிப்பிட்ட வான்ஸ் இந்த நிலைமையை “நாம் தொடர்ந்து நிர்வகிக்க வேண்டியிருக்கும்” என்றும் கூறினார்.

“நாங்கள் கவனம் செலுத்தப் போகும் இரண்டு பெரிய விஷயங்கள் இவைதான். ஈரானியர்களுக்கும் அவர்கள் விவாதிக்க விரும்பும் பிரச்சினைகள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்- CNN

Related Articles

Latest Articles