சுவிட்சர்லாந்தில் கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நிலைத்திருந்த அதிக வெப்ப சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்குப் முன்னர், குறைந்தது நான்கு கண்காணிப்பு நிலையங்களில் வெப்பநிலை 37.0 டிகிரியைத் தாண்டியது. இது சுவிட்சர்லாந்தில் ஜூன் மாதத்தில் இதுவரை பதிவான மிக உயர்ந்த வெப்பநிலையாகும்.
புக்ஸ்-ஆராவ் வானிலை நிலையத்தில் பிற்பகல் 2:40 மணிக்கு 37.2 டிகிரியாக மிக உயர்ந்த வெப்பநிலை பதிவானது. ஆர்காவ் மாகாணத்தில் உள்ள பெஸ்னாவில் 37.1 டிகிரியும், வுரென்லிங்கன் மற்றும் பேசல்-பின்னிங்கனில் 37.0 டிகிரியும் பதிவாகின.
கூட்டாட்சி வானிலை மற்றும் காலநிலை ஆய்வு அலுவலகத்தின் (மெட்டியோஸ்விஸ்) கூற்றுப்படி, ஜூன் மாதத்திற்கான முந்தைய சாதனை 1947-ல் படைக்கப்பட்டது. அப்போது, பேசல்-பின்னிங்கனில் 36.9 டிகிரி வெப்பநிலை பதிவானது.
ஜூன் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக வெப்பமான நாட்கள் நிலவி வருகின்றன.
இந்த வெப்ப அலை அடுத்த திங்கட்கிழமை வரை நீடிக்கும் என்று மெட்டியோஸ்விஸ் எதிர்பார்க்கிறது.
சுவிட்சர்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் மிக உயர்ந்த வெப்ப எச்சரிக்கை நிலை அமுலில் உள்ளது.
மூலம்-


