27.2 C
New York
Tuesday, September 8, 2026

அல்ஜீரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது சுவிஸ்.

உலககோப்பை கால்பந்து தொடரின் அல்ஜீரிய அணியை தோற்கடித்து சுவிட்சர்லாந்து அணி 16 அணிகள் கொண்ட சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

வான்கூவரில், சுவிஸ் நேரப்படி இன்று அதிகாலை நடந்த ஆட்டத்தில், அல்ஜீரிய அணியை 2 க்கு 0 என்ற கோல் கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இதன் மூலம் 16 அணிகள் பங்கேற்கும், காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியை சுவிஸ் ஜனாதிபதி கை பார்மலின் நேரில் பார்வையிட்டார்.

வான்கூவரில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் ஆட்டத்தில், கானா அல்லது கொலம்பியா அணியை சுவிஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது.

Related Articles

Latest Articles